×

சிவகங்கை தீர்த்தம் நன்னீராட்டு விழா செய்யாறு அருகே காசிவிஸ்வநாதர் கோயிலில்

செய்யாறு, ஜன.26: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, அரசங்குப்பம் கிராமத்தில் காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் சிவகங்கை தீர்த்தம் நன்னீராட்டு விழா, தெப்பல் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, கோயிலில் காலை சப்த நதி தீர்த்த சங்கீரணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசமும், விஷேச பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து வருண ஜபமும் மூலவர் காசி விஸ்வநாதருக்கு சிவகங்கை தீர்த்த நன்னீராட்டு பெருவிழாவும் நடந்தது. இரவு 8 மணி அளவில் கோயில் தெப்பக்குளத்தில் உற்சவ மூர்த்திகளான அம்பாள் காசி விசாலாட்சியும் சுவாமி காசி விஸ்வநாதரும் சிறப்பு அலங்காரத்தில் தெப்பலில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Tags : Sivagangai Theertham ,Kasiviswanathar Temple ,Nannirattu Festival ,
× RELATED சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமடம்...