×

சென்னை கிண்டி லோக் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..!!

சென்னை: சென்னை கிண்டி லோக் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி,

தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் மற்றும் நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் ஆளுநர் ரவியை சந்தித்து மனுவினை கொடுத்தனர். அந்த மனுவில் உள்ள விஷயங்கள் என்ன என்பது குறித்தான விவரம் செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அரசியல் சூழ்நிலையில் இது போன்ற சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Tags : Opposition Leader ,Edappadi Palaniswami ,Governor ,R.N. Ravi ,Chennai's Guindy Lok Bhavan ,Chennai ,Guindy Lok Bhavan ,AIADMK ,K.P. Munusamy ,Dindigul… ,
× RELATED சென்னையில் 12 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்