டோக்கியோ: ஜப்பான் ஷிமானே மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.
ஜப்பான் நேரப்படி இன்று காலை 10:18 மணியளவில் ஷிமானே (Shimane) மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. பூமிக்கடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்தது.
தற்போதைய நிலவரப்படி, சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டோஹோகு நகரில் சாலைகள் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் கார்கள் சேதமடைந்தன.
நிலநடுக்கம் காரணமாகச் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி, ஷின்-ஒசாகா மற்றும் ஹகாட்டா இடையே இயங்கும் ஷிங்கன்சென் அதிவேக புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
