- பாஜக
- காங்கிரஸ்
- தேசியச் செயலாளர்
- சூரஜ் ஹெக்டே
- சென்னை
- பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்
- பொன்னேரி
- சட்டமன்ற உறுப்பினர்
- துரை சந்திரசேகர்
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சட்டமன்ற தேர்தல் குறித்து பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய பொறுப்பாளர் சுராஜ் ஹெக்டே கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் சுராஜ் ஹெக்டேவிடம் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் விளையாடி, மோசடிகளை அரங்கேற்றுதல், வாக்கு இயந்திரங்களுடன் விளையாடுதல் தேர்தல் எதற்கு, தாங்களாகவே அறிவித்து கொள்ளலாமே. நாட்டின் உள்துறை அமைச்சருக்கு பல்வேறு பணிகள் உள்ளன. தேர்தல் எங்கெல்லாம் நடக்க உள்ளதோ அங்கே சென்று தொந்தரவு அளிப்பது, பிரித்தாளும் வகையில் கருத்துகளை தெரிவிப்பது என அமித்ஷா செயல்கள் உள்ளது. நாட்டை பாதுகாக்கும் முக்கிய பணிகள் கொண்ட அமித்ஷா, தேர்தல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் கட்சி தவெகவை காதலித்து வரும் நிலையில், திமுகவை திருமணம் செய்து கொண்டதாக நாஞ்சில் சம்பத் கூறியது பற்றிய கேள்விக்கு, ‘‘காங்கிரஸ் கட்சி நாட்டு மக்கள் அனைவரையும் நேசிக்கிறது. நாட்டு மக்களுக்காக காங்கிரஸ் கட்சி உள்ளது. அவர் அவ்வாறு நினைத்தால், நினைத்துக் கொள்ளட்டும். காங்கிரஸ் கட்சி வேறு யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை. காங்கிரஸ் – திமுக கூட்டணி பலமாக உள்ளது. உயர்மட்டக் குழு கூடி பேச்சுவார்த்தை நடத்தி காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.
