×

தவெக உள்பட அனைத்து கட்சிகளும் பாஜவுக்கு எதிராக இருக்க வேண்டும்: எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பேச்சு

 

சென்னை: அம்பத்தூர் அருகே எஸ்டிபிஐ கட்சியின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சையது அகமது தலைமை தாங்கினார். இதில் 2026ம் ஆண்டு தேர்தல் தொடர்பாக பொது முகவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அப்போது, மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசியதாவது: ஜனவரி மாதம் 20ம் தேதி மங்களூருவில் நடைபெற உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய பொதுக்குழு கூட்டத்தில் தமிழக தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்யப்பட உள்ளது. 2026ம் ஆண்டு தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். கூட்டணி அமைக்கும் கட்சியிடம் வலியுறுத்துவோம்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் சமூக அமைதியை குலைக்கும் வகையில் செயல்பட்டாலும் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் பாதுகாப்பு வழங்கிய திமுக அரசை பாராட்டுகிறோம். தமிழகத்தில் பாஜ எதிர்ப்பு அரசியலை செய்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற சூழல் இருப்பதால் அனைத்து கட்சிகளும் பாஜவை எதிர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். மேலும், தவெக உள்பட அனைத்து கட்சிகளும் பாஜவிற்கு எதிராக இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

 

Tags : TDP ,BJP ,STBI ,president ,Nellai Mubarak ,Chennai ,Ambattur ,Chennai West district ,Syed Ahmed ,2026 elections… ,
× RELATED குன்றத்தூர் அருகே அரசு பஸ்-பைக் நேருக்கு நேர் மோதியதில் மாணவன் சாவு