×

தஞ்சை செங்கிலிப்பட்டியில் வரும் 19ம் தேதி நடக்க இருந்த டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு வரும் 26ம் தேதிக்கு மாற்றம்: திமுக அறிவிப்பு

 

சென்னை: தஞ்சை மாவட்டம் செங்கிலிப்பட்டியில் 19ம் தேதி நடைபெறுவதாக இருந்த திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு வரும் 26ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து, திமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த மாதம் 29ம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், “பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ” என்று சொல்லத்தக்க வகையில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கறுப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடந்தது.

இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.ராணி பங்கேற்கும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு வரும் 19ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மாநாடு வரும் 26ம்தேதி திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெறும். இந்த மாநாட்டை, மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்களான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.ரகுபதி, சி.வி.கணேசன், எம்எல்ஏக்கள் பூண்டி கே.கலைவாணன், காடுவெட்டி தியாகராஜன், க.வைரமணி, க.அன்பழகன், வீ.ஜெகதீசன், நிவேதா முருகன், கே.கே.செல்லபாண்டியன், என்.கவுதமன், டி.பழனிவேல், அமைச்சர்கள் கோவி.செழியன், சிவ வீ.மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.கல்யாணசுந்தரம், அருண்நேரு, முரசொலி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வார்கள். நிறைவாக, தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ நன்றியுரையாற்றுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Delta Zone DMK Women's Team Conference ,Chengilipatti, Thanjavur ,DMK ,Chennai ,DMK Delta Zone Women's Team Conference ,Chengilipatti, Thanjavur district ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED குன்றத்தூர் அருகே அரசு பஸ்-பைக் நேருக்கு நேர் மோதியதில் மாணவன் சாவு