திருக்காட்டுப்பள்ளி, ஜன.5: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவியை காணவில்லை என்று அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பூதலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச்சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார்.கடந்த 2ம் தேதி காலை கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் மாணவியின் தந்தை பூதலூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
