நாகப்பட்டினம், ஜன.5: திருமருகலில் சாலை விபத்தில் காயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலன்றி இருந்தார். நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் கீழக்கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் அமிர்தம் (75). இவர் கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்து திருமருகல் நோக்கி நடந்து சென்றார். அப்போது கீழ்வேளூர் அருகே நகத்தூர் தெற்குத்தெரு பகுதியை சேர்ந்த கலையரசன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அமிர்தம் மீது மோதியது.
இதில் அமிர்தம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அமிர்தம் நேற்று இறந்தார். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
