×

கோயில் அறங்காவலர்களை அதிகாரிகள் நியமிக்கும்போது சாதி அடிப்படையில் நியமிக்கக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

 

சென்னை: கோயில் அறங்காவலர்களை அதிகாரிகள் நியமிக்கும்போது சாதி அடிப்படையில் நியமிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஒரு கோயிலின் நிர்வாகத்தில் எந்த ஒரு சாதியினரும் உரிமை கேட்க முடியாது. சேலம் மாவட்டம் பேளூரில் ஸ்ரீ தான்தோந்திரீஸ்வரர் கோயிலுக்கு 5 பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி எந்த ஒரு கோயிலிலும் எந்த ஒரு சாதியினருக்கும் உரிமை இருக்க முடியாது என தீர்ப்பு வழங்கினார். மனுதாரர் சாதி அடிப்படையில் தாக்கல் செய்த மனு பொதுக் கொள்கைக்கு எதிரானது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்

Tags : CHENNAI HIGH COURT ,Chennai ,Sri Thandondrieswarar Temple ,Baleur, Salem District ,
× RELATED வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம்