×

மூச்சு திணறி குழந்தை பலி

திண்டுக்கல், ஜன. 3: திண்டுக்கல் அருகே எரியோடு இந்திரா காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி (25). இவர் தனது மனைவி, 8 மாத ஆண் குழந்தையுடன் திண்டுக்கல் வேடபட்டியில் அவரது உறவினர் வீட்டில் குடியிருந்து வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது குழந்தை உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படவே சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

 

Tags : Dindigul ,Palanisamy ,Eriodu Indira Colony ,Vedapatti, Dindigul ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு