- Kadayam
- சூச்சமுடையார் கோயில்
- களக்காடு முண்டந்துறை புலி
- ரிசர்வ்
- அம்பாசமுத்திரம்
- கோட்டம்
- கோவிந்தபேரி பீட்
கடையம், ஜன.1: கடையம் அருகே சூச்சமுடையார் கோயில் பகுதியில் சுற்றித் திரிந்த 16 குரங்குகளை கடையம் வனச்சரகப் பணியாளர்கள் கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவிந்தபேரி பீட் வெளிமண்டலப் பகுதியான ராமநதி அணை செல்லும் சாலையில் உள்ள சூச்சமுடையார் கோயில் பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிந்தன.
இவற்றைப் பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில் குரங்குகளைப் பிடிக்க சூச்சமுடையார் கோயில் அருகே வனத்துறையினர் கூண்டு வைத்தனர். கூண்டில் 16 குரங்குகள் பிடிப்பட்டன. பிடிப்பட்ட குரங்குகள் வல்லம் பீட் ஐந்தருவி காப்புக்காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டன.
