×

புத்தகங்களோடு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

நெல்லை,ஜன.1: ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி புத்தகங்களோடு புத்தாண்டு கொண்ட்ட புத்தக கண்காட்சியை மேயர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை டவுன் மேலரதவீதியில் புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு இலக்கிய ஆர்வலர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மூங்கில்வனம் ராஜேஷ் வரவேற்றார்.

புத்தக கண்காட்சி மற்றும் விற்பனையை மேயர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை வாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் முதல்விற்பனையை துவக்கி வைத்தார். வாசகர் வட்ட தலைவர் மரியசூசை, டவுன் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, எழுத்தாளர்கள் பாஸ்கரன், தீன், நித்தில், சாஜீதா, கண்ணன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

 

Tags : English New Year ,Nellai ,Mayor ,Ramakrishnan ,New Year ,Nellai Town Upper Road ,Easwaran ,
× RELATED முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி...