நீடாமங்கலம், ஜன. 1: புதிய வாக்காளர்களும் வாக்கு பதிய வேண்டி தேர்தல் ஆணையம் சார்பில் நீடாமங்கலத்தில் கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட கலெக்டரின் அறிவுரைப்படி நீடாமங்கலம் வட்ட அலுவலகத்தில் நேற்று இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், தேர்தலில் விடுபாடின்றி வாக்குகள் பதிவு செய்திடவும் தெரிவித்து வட்ட அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கோலமிட்டு காண்பிக்கப்பட்டது. மேலும் வாக்காளர்களுக்கு துண்டு பிரகரம் விநியோகிக்கப்பட்டது. இதில் தாசில்தார் சரவணகுமார், தேர்தல் துணை தாசில்தார் அறிவழகன் மற்றும் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
