×

முசிறி-சேதுபாவாசத்திரம் சாலை அகலப்படுத்தும் பணி: உதவி கோட்டப்பொறியாளர் ஆய்வு

பேராவூரணி, ஜன.1: முசிறி-சேதுபாவாசத்திரம் சாலையில் பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட எல்லைக்குட்பட்ட குருவிக்கரம்பை அருகே தார் சாலை அமைக்கப்படுவதை நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப் பொறியாளர் ஆய்வு செய்தார்.

முசிறி-குளித்தலை-புதுக்கோட்டை-ஆலங்குடி-பேராவூரணி வழியாக சேதுபாவாசத்திரம் செல்லும் மாநில சாலையினை பரப்பு அடிப்படையில் ஒருங்கிணைந்த சாலை மேம்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் பராமரித்தல் திட்டத்தின் கீழ் சாலை அகலப்படுத்தப்பட்டு மேம்பாடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு உட்கோட்ட எல்லைக்குட்பட்ட குருவிக்கரம்பை அருகே தார் சாலை அமைக்கும் பணியை பேராவூரணி நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப் பொறியாளர் விஜயகுமார் ,உதவிப்பொறியாளர் திருச்செல்வம் ஆகியோர் பார்வையிட்டு சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். சாலை அகலப்படுத்தப்படுவதால் சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து புதுக்கோட்டை ,திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாவண்ணம் செல்ல முடியும் என்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தமிழ்நாடு அரசுக்கும் ,நெடுஞ்சாலை துறையினருக்கும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags : Musiri-Sethubavasatraam ,Peravoorani ,Highways Department ,Kuruvikarambai ,Highways ,Sethubavasatraam ,Musiri ,Kulithalai ,Pudukkottai ,Alangudi ,
× RELATED ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்