×

தேனி மாவட்டத்தில் 7,731 சிசிடிவிக்கள் மூலம் கண்காணிப்பு பணி தீவிரம்: எஸ்.பி. தகவல்

தேனி, ஜன.1: தேனி மாவட்ட எஸ்பி சினேகா பிரியா கூறியதாவது: தேனி மாவட்டத்தில் 2025ம் ஆண்டு திருட்டு சம்பந்தமாக 480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1,41,97,796 மதிப்புடைய சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த 2,389 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் 674 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்கள் என கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 81 பேருக்கு நீதிமன்றங்களின் மூலமாக தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கஞ்சா, மது, புகையிலை, திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை அதிகப்படுத்தியும், ரோந்து வாகனத்தில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தியும், அதனை காவல் கட்டுப்பாட்டு அறையில் நேரடி கண்காணிப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பிரச்னைகள் ஏற்படும் போது சம்பந்தப்பட்ட இடத்திற்கு ரோந்து வாகனங்கள் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவில் கண்டறியும் நோக்கத்தோடு மாவட்ட முழுவதும் 7,731 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Tags : Theni district ,Theni ,SP ,Sneha Priya ,
× RELATED ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்