சிவகங்கை, ஜன.1: சிவகங்கை இந்தியன் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் பிரேம்ஆனந்த் தலைமை வகித்தார். இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் ஸ்டாலின் தேசிய கவுன்சில் வங்க ஊழியர் சங்க நிர்வாகி செல்வகருப்பசாமி மற்றும பல்வேறு சங்க நிர்வாகிகள் சக்திவேல், ஞானசுந்தர், அலெக்ஸ் வினோத், பாலசங்கர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். விஜயசூர்யா நன்றி கூறினார்.
