- முத்துமாரியம்மன் கோயில் விழா
- Thiruppuvanam
- 49வது மண்டல பூஜை விழா
- முத்து மரியம்மன் கோயில்
- லடனேண்டல் பூங்கா
- முத்துமாரியம்மன்
திருப்புவனம்,ஜன.1: திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் 49வது மண்டல பூஜை விழா நாளை நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையுடன் விழா தொடங்குகிறது. நாளை காலை பத்து மணிக்கு உடைமுள், இலந்தை முள், கற்றாழை முள் உள்ளிட்ட பலவகை முட்கள் கொண்ட 8 அடி உயரம் 10 அடி அகலம் பரப்பி வைக்கப்பட்ட முள்படுக்கையில் நாகராணி அம்மையார் தவம் செய்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூற உள்ளார். மதியம் அன்னதானமும், ஜனவரி 15ம் தேதி பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.
