கொடைக்கானல்,ஜன.1:புத்தாண்டை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள தேவாலயங்களில் நேற்று இரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் புத்தாண்டை தொடர்ந்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நேற்று இரவு நடைபெற்றது.
இதனையடுத்து தேவாலயங்கள் மின் ஒளி மூலம் அலங்கரிக்கப்பட்டு வண்ண வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகிறது. மேலும் தேவாலயங்களில் இந்தியாவின் துன்பங்கள் நீங்கவும், மக்களின் வறுமை ஒழியவும், பிரிவினைகள் நீங்கி அனைவரும் ஒன்றாய் வாழவும் பிரார்த்திக்கிறோம் என்பதை வெளிபடுத்தும் விதமாக இந்தியா வரைபடம் போல் அமைக்கப்பட்டு ‘பிரே பார் இந்தியா’ என எழுதப்பட்டிருந்தது. இது மக்களை வெகுவாக கவர்ந்தது.
