சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.6ம் தேதி காலை 11 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அமைச்சரவை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
