சென்னை: எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்கள், வாக்குச்சாவடி முகவர்களிடம் வழங்கலாம். நாள்தோறும் அதிகபட்சம் 10 படிவங்களை வாக்குச்சாவடி முகவர்கள் பெற தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நாள்தோறும் 10 படிவங்களை பெறலாம். பெறப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் முகவர்கள் ஒப்படைக்க வேண்டும். படிவங்களில் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்பட்டு திருப்தி அடையப்பட்டது என முகவர்கள் உறுதிமொழி வழங்க வேண்டும்
