×

நாசரேத்தில் புத்தாண்டை முன்னிட்டு அன்பின் விருந்து ஆராதனை

நாசரேத். டிச. 30: புத்தாண்டை முன்னிட்டு நாசரேத் அசெம்பிளி ஆப் காட் சபையில் நடந்த அன்பின் விருந்து ஆராதனையில் திரளானோர் பங்கேற்றனர். நாசரேத் அசெம்பிளி ஆப் காட் சபையில் புத்தாண்டை முன்னிட்டு அன்பின் விருந்து ஆராதனை நடந்தது. நாசரேத் ஏஜி சபை ஊழியர் டேவிட் மெர்வின், பாடல்களோடு ஆராதனை நடத்தினார். தூத்துக்குடி பிராந்திய ஏஜி சபைகளின் மேற்பார்வையாளரும், நாசரேத் ஏஜி சபையின் தலைமை போதகருமான சங்கை எட்வின் பிரபாகர், சிறப்பு செய்தி அளித்தார். இதையடுத்து சபை வளாகத்தில் அன்பின் ஐக்கிய விருந்து நடந்தது. இதில் மெஞ்ஞானபுரம், கடையனோடை, மூக்குப்பீறி, நாசரேத் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags : Nazareth ,New Year's Eve ,Nazareth Assembly ,God ,Nazareth Assembly of God ,Nazareth AG Church… ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம்