×

மார்த்தாண்டம் அருகே சர்சைக்குரிய கோயிலில் புனிதநீருடன் நுழைய முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

மார்த்தாண்டம், டிச.30: மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கடை பகுதியில் உள்ள முடியம்பாறை பத்ரகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மூலவர் சிலையை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் எடுத்து சென்றனர். இதேபோல் மயிலாடும்பாறை மலைமேல் உள்ள முருகன் கோயிலின் சிலையையும் அதிகாரிகள் எடுத்து சென்றனர். இதனை கண்டித்தும், சிலைகளை மீண்டும் கோயிலில் வைக்கக்கோரியும் இந்து முன்னணி மற்றும் பக்தர்கள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்து முன்னணி சார்பில் கல்லுப்பாலம் இசக்கி அம்மன் கோயிலில் 108 வகையான மூலிகை பொருட்கள், 68 வகையான பழவகைகளால் மகாசண்டி யாகம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். யாகம் முடிந்த பிறகு யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனிதநீரை முடியம்பாறை பத்ரகாளி அம்மன் கோயிலில் தெளிக்க இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் அரசு ராஜா தலைமையில் 11 பேர் காரில் கோயிலுக்கு சென்றனர். அப்போது கோயில் நுழைவுவாயில் அருகே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலே செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறி புனிதநீரை கோயிலுக்கு செல்லும் சாலையில் ஊற்றினர்.தொடர்ந்து அங்கிருந்து செல்ல முயன்ற இந்து முன்னணி துணைத்தலைவர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு அங்குள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags : Hindu Front ,Marthandam ,Mudiyamparai Bhadrakali ,Amman ,Unnamalai Kadai ,Murugan ,Mayiladumbarai ,
× RELATED ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி...