×

ஆட்டோவை சேதப்படுத்திய கொத்தனார் கைது

நித்திரவிளை, டிச.30: நித்திரவிளை அருகே ஆலங்கோடு தாவரம்வீடு பகுதியை சேர்ந்தவர் சசி (57). ஆட்டோ டிரைவர். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் அருள்சஜு (40). கொத்தனார். சசி நேற்று முன்தினம் மதியம் அருள்சஜு வீட்டின் முன்பக்கம் வழியாக ஆட்டோவை ஓட்டி சென்ற போது, அருள்சஜு ஆட்டோவை வழிமறித்து, முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி விட்டி, இனி இந்த பகுதி வழியாக வந்தால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி சென்றுள்ளார். இது சம்பந்தமாக சசி கொடுத்த புகார் மீது நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து அருள்சஜுவை கைது செய்தனர்.

Tags : Bricklayer ,Nithiravilai ,Sasi ,Alankodu Tavaramveedu ,Arulsaju ,
× RELATED ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி...