- இளைஞர் காங்கிரஸ் நிர்வாகக் குழு
- Thirumanur
- யூனியன்
- அரியலூர்
- யூனியன் அரசு
- காந்தி
- இளைஞர் காங்கிரஸ்
- இளைஞர் காங்கிரஸ் கட்சி
- திருமணூர் மாவட்டம்
- அரியலூர் மாவட்டம்
அரியலூர், டிச.19: திருமானூரில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நூறுநாள் வேலை திட்டத்தின் காந்தி பெயரை மாற்றம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர் மாவட்டம், திருமானூரில் இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. தொகுதித் தலைவர் மரியஜான் பிரிட்டோ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றிய ஒன்றிய அரசைக் கண்டிப்பது, வாக்கு திருட்டு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் புதிய வாக்காளர் பட்டியலை அனைவரும் தெரிந்துக் கொள்ளும் வகையில் பிடிஎப் வடிவில் வெளியிட வேண்டும்.
மாவட்டத்திலுள்ள சிமென்ட் ஆலைகளில், படித்த உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலுள்ள புத்தகக் கடைகளில், இக்கோயிலின் வரலாறு புத்தகங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நிக்கோலஸ்ராஜ், அருண் உள்ளிட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக வட்டாரத் தலைவர் பாரதி வரவேற்றார். நகர இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் நன்றி கூறினார்.
