- ஸ்டாலின் திட்டம்
- மருத்துவ
- முகாம்
- Jayankondam
- அரியலூர்
- கலெக்டர்
- ரத்தின சாமி
- தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம்
- தொழிலாளர் திணைக்களம்
- முகாம்…
அரியலூர்,டிச.19: அரியலூர் கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு:
தொழிலாளர் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் இதர 19 அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் பதிவு பெற்ற அமைப்புச் சாராத் தொழிலாளர்களுக்கு நோய்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் நோய்களை கண்டறிந்து அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாரம், தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (20ம்தேதி) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. எனவே இம்முகாமில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத அமைப்புச்சார தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் முகாமிற்கு வரும் போது கீழ்க்கண்ட ஆவணங்கள் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவ முகாமிற்கு வரும் பதிவு பெற்ற அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண், ஆதார் அடையாள அட்டை, பதிவு நலவாரிய அடையாள அட்டை, இதற்கு முன்பு சிகிச்சை பெற்ற விவரங்கள் மருத்துவ முகாமிற்கு வரும் பதிவு பெறாத அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கபட்ட கைப்பேசி எண், ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயதிற்கான ஆவணம், பணிச்சான்று , வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ்)-1,இதற்கு முன்பு சிகிச்சை பெற்ற விவரங்கள். எனவே இந்த நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் அனைத்து அமைப்புச்சாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்துக் கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
