×

பராமரிப்பு பணிகள் எதிரொலி; நாளைய மின்தடை பகுதிகள்

மதுரை, டிச. 19: மதுரை மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலைய துணை மின் நிலையங்களில் நாளை (டிச.20) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என, மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன்படி மாட்டுத்தாவணி துணைமின் நிலையத்திற்குட்பட்ட மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கேகே நகர், தொழிற்பேட்டை ஏரியா, அண்ணா நகர் 80 அடி ரோடு, எச்ஐஜி காலனி, வைகை காலனி கிழக்கு, சுகுணா ஸ்டோர் சந்திப்பு, யானைக்குழாய், வைகை அப்பார்ட்மென்ட்ஸ், ஹவுசிங் போர்டு பகுதி, ராமவர்மா நகர், பிஆர்சி., புதூர், மேலமடை, அன்புநகர், சதாசிவ நகர், அழகர்கோயில் மெயின் ரோடு, கற்பக நகர், லூர்து நகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சூர்யா நகர், மின்நகர், கொடிக்குளம், அல் அமீன் நகர், வக்போர்டு கல்லூரி, பிடி காலனி, மானகிரி, சுப்பையா காலனி, நெல் வணிக வளாகம், மீனாட்சி மிஷன் மருத்துவமனை, விநாயகர் நகர், பூ மார்க்கெட். கேகே நகர் ஆர்ச் மற்றும் இவற்றின் சுற்றுப்பகுதிகள்.

இதேபோல், அண்ணா பஸ் நிலைய துணைமின் நிலையத்திற்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலகம், காந்தி மியூசியம், கரும்பாலை பகுதி, டாக்டர் தங்கராஜ் சாலை, மாநகராட்சி அண்ணா மாளிகை, மடீட்சியா, எஸ்பிஐ குடியிருப்பு பகுதி, காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய் நகர், கமலா நகர், மருத்துவ கல்லுாரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லுாரி, அரசு மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோயில் தெரு, சின்ன கண்மாய் தெரு, எச்ஏ கான் ரோடு, இ2இ2 ரோடு, செல்லூர் பகுதிகள், பாலம் ஸ்டேஷன் ரோடு, கான்சாபுரம், தல்லாகுளம் பிஎஸ்என்எல், யூனியன் கிளப், தமுக்கம் பகுதி, சேவாலயம் ரோடு பகுதிகள்.

இவற்றுடன் ஆர்ஆர் மண்டபம், இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு, ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைப்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல், யானைக்கல்லின் ஒரு பகுதி, 50 அடி ரோடு, போஸ் வீதி, குலமங்கலம் ரோடு, தாமஸ் வீதி, நரிமேடு மெயின் ரோடு, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, அன்னை நகர், குருவிக்காரன் சாலை, எல்ஐஜி காலனி, பள்ளிவாசல் தெரு, மவுலானா சாகிப் தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, கேடிகே தங்கமணி தெரு, அரவிந்த் கண் மருத்துவமனை, சர்வேஸ்வரர் கோயில், அண்ணா நகர் வடக்கு மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகள்.

இதேபோல், திருமங்கலம் துணை மின்நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், காலை 9மணிமுதல் மாலை 5 மணி வரை திருமங்கலம் நகர் பகுதி, ஜவகர் நகர், சியோன் நகர், என்ஜிஓ நகர், பிசிஎம் நகர், அசோக் நகர், முகமதுஷா புரம், சோனைமீனா நகர், சந்தைப்பேட்டை, செங்குளம், பகவத்சிங் நகர், கற்பகம் நகர், கலைநகர், கரிசல்பட்டி, பாண்டியன் நகர், பொற்கால நகர், மறவன்குளம், நெடுமதுரை, சிவரக்கோட்டை, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, மேலக்கோட்டை, மைக்குடி, உரப்பனூர், கரடிக்கல் மற்றும் இவற்றின் சுற்றுப்பகுதிகளில் மின்தடை ஏற்படும். இத்தகவலை திருமங்கலம் மின்கோட்ட செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.

Tags : Madurai ,Madurai Mattuthavani ,Anna Bus ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...