×

ராதாபுரம் தொகுதியில் மக்கள் நலத்திட்டப்பணி

பணகுடி, டிச. 19: ராதாபுரம் சட்டமன்ற தொகுதி, காவல்கிணறு ஊராட்சி, ராம் நகரில் ரூ.25 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டுதல், லெப்பை குடியிருப்பில் ரூ.2 லட்சத்தில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைத்தல், வட்டவிளையில் ரூ.25 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, செம்பிகுளத்தில் ரூ. 5 லட்சத்தில் காத்திருப்போர் அறை, தெற்கு பெருங்குடியில் ரூ.18 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, இருக்கந்துரை கல்யாணி புரத்தில் பயணியர் நிழற்குடை உள்ளிட்ட சுமார் கோடிக்கணக்கில் மதிப்பிலான பல்வேறு மக்கள் நலத்திட்டப்பணிகளை சபாநாயகர் அப்பாவு துவக்கிவைத்தார். நிகழ்ச்சிகளில் நெல்லை மாவட்ட பஞ். தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஷ், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் கோசிஜின், பஞ். தலைவர்கள் ஆவரைக்குளம் அழகுபாஸ்கர், காவல்கிணறு இந்திரா சம்பு, மாவட்ட கவுன்சிலர் சாந்தி, இளைஞர் அணி சுதாகர், அனிஸ்டன், சாம், செந்தில், தகவல் தொழில்நுட்ப அணி விஜயன், எழில், சேவியர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Radhapuram constituency ,Panagudi ,Radhapuram ,Kavalkinaru panchayat ,Ram Nagar ,Leppai ,Vattavilai… ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...