×

நடுவக்குறிச்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

சங்கரன்கோவில், டிச. 19: சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, இலவச சைக்கிள்களை மாணவ- மாணவிகளுக்கு வழங்கினார். நிகழ்வில் பட்டாடைகட்டி பஞ். தலைவர் சுமதி கனகவேல், ஜான் கிளிட்டஸ், கிளைச்செயலாளர் சங்கர், ஓய்வுபெற்ற தாசில்தார் சுப்பிரமணியன், சர்வோதயா மண்டல தலைவர் வெள்ளத்துரை, பாக முகவர்கள் சந்திரன், சுந்தர்ராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் அஜித்குமரேசன், திமுக மூத்த உறுப்பினர் காசிராஜன், தொழிலதிபர் கனகவேல் மற்றும் பாலாஜி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனிடையே பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு இன்வெர்ட்டர் பேட்டரி வேண்டும் என ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட அவர், தனது சொந்த செலவில் பள்ளிக்கு இன்வெர்ட்டர் பேட்டரி வழங்கினார். இதையடுத்து கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றியதற்காக ராஜா எம்எல்ஏவுக்கு ஆசிரியர்களும், மாணவ- மாணவிகளும் நன்றி தெரிவித்தனர்.

Tags : Nadukurichi ,Sankarankovil ,Tenkasi ,North ,District ,DMK Secretary ,Raja MLA ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...