- மலை
- அரூர் ஆர்.டி.ஓ.
- அரூர்
- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்
- அண்ணாமலை
- விவசாயிகள் சங்கம்
- மாநில செயலாளர்
- பெருமாள்
அரூர்,டிச.19: பட்டா இல்லாத பழங்குடி மக்களுக்கும், வீட்டுமனை பட்டா வழங்க கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் அரூர் ஆர்டிஓ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பெருமாள், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மல்லையன், மாநில துணைத்தலைவர் கண்ணகி, மாவட்ட பொருளாளர் சந்தோஷ், மாவட்ட துணைத்தலைவர்கள் சொக்கலிங்கம், அன்புரோஸ், மாவட்ட துணை செயலாளர்கள் செல்வி, பழனிச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் குமார், தனுசன், வஞ்சி, நேரு, கோவிந்தன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஆர்டிஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
