×

இன்று பணிகள் துவக்கம் தூய்மையான காற்றை பெற மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க வேண்டும்

ஜெயங்கொண்டம், டிச. 18: உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் \”வனமும் வாழ்வும்\” என்ற பயிற்சி பட்டறை சார்ந்த புத்தக தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியர் இங்கர்சால் தலைமை வகித்தார். ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். பசுமைப்பள்ளி திட்டத்தின் படி சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் சார்ந்து ‘‘வனமும் வாழ்வும்’’ என்ற பயிற்சிப்பட்டறை நடத்துவதற்கு பள்ளி மாணவிகள் இருபது பேருக்கு பயிற்சி புத்தத்தொகுப்பு வழங்கப்பட்டது.

நிகழ்வில் வனக்காப்பாளர் பழனிவேல் கலந்து கொண்டு பேசும்போது, சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் சார்ந்து மாணவிகளாகிய நீங்கள் பயிற்சிக்கு கொடுக்கப்பட்ட புத்தகத்தை படித்து, சுற்றுச்சூழல் பாதுகாக்க, இயற்கையை பாதுகாக்க, மரக்கன்றை அதிக அளவில் நட்டு பேணி பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் தூய்மையானகாற்றை பெற்று நிம்மதியான எதிர்காலத்தை சிறப்பாக்க அடையமுடியும் என்று ேபசினார். நிகழ்வில் வனக்காவலர் குணசீலன், ஆசிரியர்கள் வனிதா, சாந்திதமிழரசி, பாவைசங்கர், தமிழாசிரியர் இராமலிங்கம் உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பசுமைப்படை ராஜசேகரன் நன்றி கூறினார்.

Tags : Jayankondam ,Udayarpalayam Government Girls' Higher Secondary School ,Assistant Principal ,Ingersoll ,Teacher ,Selvaraj ,Green School ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்