பழநி, டிச. 18: பழநி உழவர் சந்தை பகுதியில் டவுன் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த சிவகிரிப்பட்டியை சேர்ந்த விஜய்கண்ணன் (28), கார்த்திக் சுதன் (25) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் இருவரும் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
