- காங்கிரஸ்
- கேடிசி
- ஒன்றிய பிஜேபி ஊராட்சி
- நெல்லை
- காங்கிரஸ் கட்சி
- யூனியன் அரசு
- மகாத்மா காந்தி
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- பொருளாளர்
- நாங்குநேரி ரூபி…
நெல்லை, டிச. 18: மகாத்மா காந்தியின் பெயரை 100 நாள் வேலை திட்டத்திலிருந்து நீக்கிய ஒன்றிய அரசை கண்டித்து கேடிசி நகரில் இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் நாங்குநேரி ரூபி மனோகரன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: ஏழை, எளிய மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிக்கும் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த 100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கும் ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கும் வகையில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாளை. கேடிசி நகர் மங்கம்மாள் சாலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே இன்று (18ம் தேதி) மாலை 4 மணிக்கு எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள், கிராம கமிட்டி தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ரூபி மனோகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
