- மெங்னானபுரம் பெண்கள் பள்ளி
- உடன்குடி
- நான்சி
- மெஞ்ஞானபுரம்
- பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- தூத்துக்குடி-நாசரேத் மறைமாவட்டம்
உடன்குடி, டிச. 18: மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்தவர் நான்சி (26). இவரது கணவர் சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். நான்சி, தூத்துக்குடி- நாசரேத் டயோசீசன் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மெஞ்ஞானபுரத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக உதவியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் தற்போது தூத்துக்குடி- நாசரேத் டயோசீசன் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் நிலையில் 40 வயது பெண் ஒருவருக்கு நியமன ஆணை வழங்கி, இப்பள்ளிக்கு அனுப்பி வைத்தது. இந்தப் பெண் நேற்று பள்ளிக்கு வந்து உதவியாளர் பணியில் சேர்ந்தார். இந்த தகவலறிந்த மெஞ்ஞானபுரம் பொதுமக்கள் ஏராளமானோர் பள்ளி முன்பு திரண்டு, புதிய பணி நியமனத்தை எதிர்த்து கோஷமிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நிர்வாகிகள், பணி நியமன ஆணையை ரத்து செய்தனர். இதையடுத்து ஊர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
