×

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

சிவகங்கை, டிச.17: சிவகங்கையில் வீட்டின் மோட்டார் சுவிட்சை இயக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை அசீஸ் நகரைச் சேர்ந்தவர் கஸ்பார். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி லூசியா(48). நேற்று காலை வீட்டிலிருந்த மோட்டார் சுவிட்சை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அவரை உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sivaganga ,Kaspar ,Asees Nagar, Sivaganga ,Lucia ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்