×

அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களை உறுதியாக நம்பும் சோனியா, ராகுல் காந்தியை பாஜக பழிவாங்குகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களை உறுதியாக நம்பும் சோனியா, ராகுல் காந்தியை பாஜக பழிவாங்குகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பாஜக திட்டத்தை நீதித்துறை மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி துன்புறுத்தும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பயமில்லாமல் உண்மையின் பக்கம் நின்று காங். தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி வென்றுள்ளனர்.

பழிவாங்கும் நோக்கில் ஒன்றிய அரசு செயல்படுகிறது

பழிவாங்கும் நோக்கத்தோடு ஒன்றிய அரசு செயல்படுவதால் புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மை அழிக்கப்படுகிறது. அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களை உறுதியாக நம்பும் சோனியா, ராகுல் காந்தியை பாஜக பழிவாங்குகிறது. அரசியல்ரீதியில் எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாகவும் முதல்வர் கண்டனம் தெரிவித்தார்.

Tags : Sonia ,BJP ,Rahul Gandhi ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,
× RELATED மெரினா கடற்கரையில் வீடற்றோருக்கான...