×

லாஸ் ஏஞ்சல்சில் பயங்கரம்; பிரபல ஹாலிவுட் இயக்குநர் ரெய்னர், மனைவி கொலை..? மகன் அதிரடி கைது

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டின் பிரபல இயக்குநரும் நடிகருமான ராப் ரெய்னர் (78) தனது மனைவி மிசேல் உடன் லாஸ் ஏஞ்சல்சில் பிரன்ட்வுட் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணி அளவில் மருத்துவ உதவிக்கான அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, வீட்டில் சென்று பார்த்த போது ரெய்னரும் அவரது மனைவியும் சடலமாக கிடந்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

விசாரணை நடப்பதால் தற்போதைய நிலையில் விவரங்களை வழங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர். அவர்கள் கத்திக்குத்து காயங்களால் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடப்பதாகவும், கொலைக்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர். இதற்கிடையே நீண்ட விசாரணையைத் தொடர்ந்து ரெய்னர், மிசேலின் மகன் நிக்கை போலீசார் கைது செய்துள்ளனர். சொத்து தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Tags : Los Angeles ,Hollywood ,Rainer ,Rob Rainer ,Michelle ,Brindwood ,
× RELATED பிரதமர் மோடியை ஜோர்டான்...