×

மணமேல்குடியில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்

அறந்தாங்கி, டிச. 15: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 15-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது. போட்டியில் திருச்சி,தஞ்சாவூர், புதுக்கோட்டை தூத்துக்குடி, சிவகங்கை,தேனி,கம்பம் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் போட்டியில் பங்குபெற்றது. பெரியமாடு,நடுமாடு, சின்னமாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட பந்தைய இலக்கை நோக்கி ஒன்றையொன்று முந்திச் சென்றன.

போட்டியில் கலந்து கொண்டு ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. பந்தைய நிகழ்ச்சியில் சாலையின் இருபுறமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

Tags : cart ,Manamelkudi ,Aranthangi ,annual ,Cattle Cart Race ,Manamelkudi, Pudukkottai district ,Trichy ,Thanjavur ,Pudukkottai ,Thoothukudi ,Sivaganga ,Theni ,Kambam Coimbatore ,
× RELATED ரேஷன் அட்டைகள் சிறப்பு குறைதீர் முகாம்