×

வேலைக்கு சென்ற வாலிபர் மாயம்

கடலூர், டிச. 15: கடலூர் முதுநகர் சான்றோர்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வள்ளல்குமார் என்கிற முகமது உமர்(30). முதுநகரில் உள்ள தனியார் கம்பெனியில் மிஷின் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.  சம்பவத்தன்று வீட்டிலிருந்து புறப்பட்டு வேலைக்குச் சென்றவர், அதன் பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி நிஷா அளித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, முகமது உமரை தேடி வருகின்றனர்.

 

Tags : Cuddalore ,Mohammed Umar ,Vallalkumar ,Kaliamman Kovil Street, Channorpalayam, Cuddalore ,Mudhunagar ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்