- அத்தியூர் கிராமம்
- குன்னம்
- அத்தியூர்
- அருண் மருத்துவமனை மற்றும் இளைஞர் நலச் சங்கம்
- குன்னம் தாலுக்கா
- பெரம்பலூர் மாவட்டம்
குன்னம், டிச.13: அத்தியூர் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாமில் 19 நபர்களுக்கு வாக்கர் மற்றும் வாக்கர் ஸ்டிக் வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அத்தியூர் கிராமத்தில் அருண் மருத்துவமனை மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து பொது மருத்துவ முகாம் மருத்துவர் கொளஞ்சிநாதன் தலைமையில்நடைப்பெற்றது.
அத்தியூர் கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். பொது மருத்துவ முகாமில் 368 நபர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.19 நபர்களுக்கு வாக்கர் மற்றும் வாக்கர் ஸ்டிக் வழங்கப்பட்டன. முகாமில் வந்திருந்த அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கப்பட்டன.
