×

10.5 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு பெரம்பலூரில் வன்னியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,டிச.13: பெரம்பலூரில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில், 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று (12ம் தேதி) பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மருத வேல் தலைமை வகித்தார்.

மாவட்டத் தலைவர் தமிழ்ஒளி, வன்னியர் சங்கத் தலைவர் அசோகன், மாநில துணைத் தலைவர் அனுக்கூர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் அம்சவள்ளி, மாவட்ட அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் குமரவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்தியசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் சுரேஷ். மாநில துணைத்தலைவர் பிஆர்பி வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை பேசினர். நகர செயலாளர் சக்திகுமார் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கண்ணதாசன், மாவட்ட வன்னியர் சங்க துணைதலைவர் தேவராஜன், மாவட்ட இளைஞரணி தலைவர் இளவேனில், மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என திரளாக கலந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற தமிழகஅரசை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Vanniyar Sangam ,Perambalur ,Patali Makkal Katchi ,Vanniyars ,Patali ,Makkal ,Katchi… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...