- ஸ்டாலின்
- மருத்துவ
- திருவாரூர்
- ஸ்டாலின் மருத்துவ முகாம்
- கூத்தாநல்லூர் அரசு பெண்கள்'
- மேல்நிலை
- பள்ளி
- கலெக்டர்
- மோகனச்சந்திரன்
திருவாரூர், டிச. 13: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பொதுமக்கள் மற்றும் நலவாரிய தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழக முதல்வரால் துவங்கி வைக்கப்பட்டுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகமானது நேற்று கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறும் இந்த முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நலம், குழந்தைகள் நலம், இருதய நோய் பிரிவு, மூளை நோய் பிரிவு ,தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம் மற்றும் காது மூக்கு தொண்டை,
மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், கதிரியக்கவியல், நுரையீரல் பிரிவு, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் இந்த சிகிச்சையின் போது இரத்த பரிசோதனை, சளி பரிசோதனை, இசிஜி, எக்கோ, அல்ட்ரா சோனோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும் என்பதால் பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட 20 வாரிய உறுப்பினர்கள் உட்பட அனைவரும் தவறாமல் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
