×

திருவாரூரில் இருவேறு சம்பவங்களில் 2 பேர் பலி

திருவாரூர், டிச. 13: திருவாரூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் இறந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே வேலங்குடி கிராமத்தில் வசிப்பவர் ஜனகராஜ். இவரது தந்தை சந்திரகாசு (60) கூலித் தொழிலாளி. இவர் கடந்த 7ந் தேதி தனது வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டூவீலர் ஒன்று மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் சந்திரகாசுவை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சந்திரகாசு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுதொடர்பாக டூவீலரை ஓட்டிச் சென்ற அன்னதானபுரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (48) என்பவரை பேரளம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இதேபோல் பேரளம் அருகே இருந்து வரும் மருதுவாஞ்சேரி குளத்து மேட்டு தெருவில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் (50). கூலி தொழிலாளி.

இவரது மனைவி செல்வி (42). அதே தெருவில் வசித்து வரும் லதா என்பவர் வீட்டில் கடந்த மாதம் 14 ந் தேதி நகைகள் திருட்டு போனதாகவும் பின்னர் நகைகள் கிடைத்த நிலையில் 5 பவுன் செயின் மட்டும் கிடைக்கவில்லை என்றும், செல்வி தான் திருடியிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் அவரை பார்க்கும் இடத்தில் எல்லாம் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக லதா கூறி வந்ததாகவும் இதனால் செல்வி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனல் செல்வி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பேரளம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Thiruvaroor ,Thiruvarur ,Thiruvarur district ,Janagaraj ,Velangudi ,Beralam ,Chandrakasu ,
× RELATED ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம் செய்யாறில்