×

செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.25.63 கோடியில் 11 வளர்ச்சித்திட்ட பணிகள்

அரியலூர், டிச. 12: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பேரூராட்சி மற்றும் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளில் ரூ.25.63 கோடி மதிப்பீட்டில் 11 புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டார்.

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்த பின்னர் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஓன்றியத்தில் பல்வேறு புதிய சாலைகள் அமைக்கின்ற பணிகள், துவக்கி வைக்கப்பட்டது. கடந்த மழைக்காலங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின்போது வெள்ள நீர் வடியாமல் இரண்டு கிராமங்கள் மூழ்குகின்ற நிலையில் இருந்த இடத்தில் சாலையை வெட்டி நீரினை அகற்றுகின்ற நிலை இருந்தது. அந்த இடத்தில் புதிய பாலம் அமைக்கப்பட இருக்கிறது.

பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று செந்துறை – ஜெயங்கொண்டம் சாலையை அகலப்படுத்தும் பணி, அதேபோன்று பல்வேறு சாலைகளை அகலப்படுத்துக்கின்ற பணி, புதிய சாலைகள் அமைக்கும் பணி, பாலம் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி உடையார்பாளையம் பேரூராட்சியில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி – சிதம்பரம் சாலை கி.மீ 76/7 – 77/9 வரை சாலை அமைக்கும் பணியினையும், தொடர்ந்து, உடையார்பாளையம் பேரூராட்சி வார்டு எண்.5-ல் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியையும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் துவக்கி வைத்து, பின்னர், உடையார்பாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான வாகனத்தினையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து செந்துறை ஊராட்சி ஒன்றியம், உஞ்சினி ஊராட்சியில் ரூ.220 லட்சம் மதிப்பீட்டில் உஞ்சினி – வாரியங்காவல் சாலை கி.மீ 2/0 – 4/0 வரை ஒரு வழித்தடத்திலிருந்து இடைவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிபடுத்துதல் பணியையும், தொடர்ந்து, ரூ.230 லட்சம் மதிப்பீட்டில் உஞ்சினி – வாரியங்காவல் சாலை கி.மீ 0/0 – 2/0 வரை ஒரு வழித்தடத்திலிருந்து இடைவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிபடுத்துதல் மற்றும் கி.மீ 0/8-ல் பெட்டி வடிவ கல்வெர்ட் திரும்ப கட்டுதல் பணியையும், அதனைத்தொடர்ந்து, செந்துறை ஊராட்சியில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1400 லட்சம் மதிப்பீட்டில் அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலை (வழி) செந்துறை (மா.நெ.217) கி.மீ 22/0 -24/0 வரை இரு வழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிபடுத்துதல், பெட்டி வடிவ கல்வெர்ட் திரும்ப கட்டுதல், தடுப்பு சுவர் அமைத்தல், மையத் தடுப்பு அமைத்தல் மற்றும் பேருந்து நிறுத்தம் அமைத்தல் பணிகளையும், பின்னர் நக்கம்பாடி ஊராட்சியில் ரூ.132 லட்சம் மதிப்பீட்டில் செந்துறை – வேப்பூர் – இறையூர் சாலை வழி புது வேட்டக்குடி கி.மீ 1/0 – 4/0 வரை ஓடுதளத்தின் தரத்தை மேம்பாடு செய்தல் பணியையும் துவக்கி வைத்து, பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு, உரிய காலத்திற்குள் விரைவாக முடித்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுலவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, குழூமூர் ஊராட்சியில் ரூ.230 லட்சம் மதிப்பீட்டில் பொன்பரப்பி – திட்டக்குடி சாலை கி.மீ 9/8 – 12/0 வரை ஒரு வழித்தடத்திலிருந்து இடைவழித்தடமாக அகலப்படுத்துதல் பணியையும், தொடர்ந்து ரூ.135 லட்சம் மதிப்பீட்டில் செந்துறை – அங்கனூர் – அகரம்சீகூர் – திருமாந்துரை சாலை கி.மீ 7/0 – 9/4 வரை ஓடுதளத்தின் தரத்தை மேம்பாடு செய்தல் பணியையும், பின்னர், ராம்கோ சிமெண்ட் ஆலை முன்பு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மாத்தூர் – கோட்டைக்காடு முதல் சிலுப்பனூர் சாலை (வழி) தளவாய் சேந்தமங்கலம் சாலை கி.மீ 1/4 -ல் பெட்டி வடிவ கல்வெர்ட் திரும்ப கட்டுதல் பணியையும், அதனைத்தொடர்ந்து சன்னாசிநல்லூர் ஊராட்சியில் ரூ.105 லட்சம் மதிப்பீட்டில் அங்கனூர் – தாமரைப்பூண்டி சாலை (வழி) சன்னாசிநல்லூர் சாலை கி.மீ 2/6 – 5/0 வரை ஓடுதளத்தின் தரத்தை மேம்பாடு செய்தல் பணியையும் துவக்கி வைத்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சிகளில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் வடிவேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி, உடையார்பாளையம் பேரூராட்சி மன்றத்தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், திமுக மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் லூயி கதிரவன், திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ் ,எழில்மாறன், கலியபெருமாள், வழக்கறிஞர் பொன் செல்வம், திமுக மாவட்ட பிரதிநிதி காளமேகம் , திமுக மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ராமராஜன் , திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து, குன்னம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமணி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தார் சாலை அமைக்கும் பணி
உடையார்பாளையம் பேரூராட்சியில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி – சிதம்பரம் சாலை கி.மீ 76/7 – 77/9 வரை சாலை அமைக்கும் பணியினையும், தொடர்ந்து, உடையார்பாளையம் பேரூராட்சி வார்டு எண்.5-ல் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியையும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் துவக்கி வைத்து, பின்னர், உடையார்பாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான வாகனத்தினையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Tags : Senthurai Panchayat Union ,Ariyalur ,Transport and Electricity Minister ,S.C. Sivashankar ,Udayarpalayam Town Panchayat ,
× RELATED செய்யாறு பஸ் ஸ்டாண்டில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது