×

ரேஷன் குறைதீர் முகாம் நாளை நடக்கிறது

மதுரை, டிச. 12: மதுரை மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் நாளை (டிச.13) நடக்கிறது. குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில், நாளை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், நகல் அட்டை வேண்டுதல், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் குறித்த புகார்கள் மற்றும் சேவை குறைபாடுகள் மற்றும் இதர குறைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Madurai ,Madurai district ,Supplies Taluka ,Taluka ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...