×

எம்.ஆர்.சி ராணுவ மையத்தில் என்சிசி மாணவர்களுக்கு பயிற்சி

ஊட்டி : குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் இந்தியாவின் பழமையான வரலாற்று சிறப்புமிக்க ஒரு படை பிரிவாகும். இங்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இங்கு தேசிய மாணவர் படையில் உள்ள பட்டதாரி மாணவர்களுக்கான பயிற்சி முகாம் குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்டில் நேற்று துவங்கியது. மெட்ராஸ் ரெஜிமென்டின் துணை கமாண்டன்ட் கர்னல் நித்தின் குட்டப்பா இந்த பயிற்சி முகாமினை துவக்கி வைத்து உரையாற்றினார்.

14 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் படை அணிவகுப்பு, மலையற்றம், புதிய ரக ஏகே 203, எஐஜி., அசால்ட் ரைபிள் உள்ளிட்ட துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை கையாள்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளை சேர்ந்த 54 பட்டதாரி மாணவர்கள் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளனர். இந்த பயிற்சியினை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதில் பயிற்சி பெற்றவர்கள் தகுதிதேர்வு இன்றி ராணுவ அதிகாரிகளாக பணியில் சேர தகுதி பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : NCC ,C Military Center ,Medras Regiment ,Gunnar ,Wellington ,India ,Tamil Nadu ,Karnataka ,Kerala ,Andhra Pradesh ,
× RELATED தமிழ்நாடு அரசுப் பணியாளர்...