×

234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனு: காங்கிரஸ் அறிவிப்பு!

 

சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனு வினியோகம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனு இன்று முதல் (10.12.2025) வருகிற 15.12.2025 வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனு படிவங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலே அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிலோ சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் தற்போது டிசம்பர் 31, 2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Congress ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Congress Party ,Tamil Nadu Congress ,President ,Selvapperundhakai ,
× RELATED தமிழ்நாடு அரசுப் பணியாளர்...