×

திருக்குறுங்குடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கைக்கடிகாரம் வழங்கல்

களக்காடு, டிச.10: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு களக்காடு அருகே திருக்குறுங்குடி டிவிஎஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் 92 மாணவ-மாணவியருக்கு திருக்குறுங்குடி நகர திமுக சார்பில் கைக்கடிகாரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. களக்காடு வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வகருணாநிதி தலைமை தாங்கி மாணவர்களுக்கு கைக்கடிகாரம் வழங்கினார். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் முருகன், பொருளாளர் அண்ணாதுரை, முன்னாள் மாட்ட பிரதிநிதி ராமலிங்கம், வார்டு செயலாளர்கள் வேலாயுதம், செல்வின்துரை, ஞானதுரை, சேரமன்பாண்டி, அரியதுரை பாண்டி, குமார், கஜேந்திரன், இசக்கியப்பன், இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்தராஜ், கூட்டுறவு சங்க தலைவர் இலங்காமணி, பண்டகசாலை தலைவர் கணேசன், மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், தொமுச சூலுடையார், மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன் சிறப்பாக ஏற்பாடு செய்ந்திருந்தார்.

Tags : Thirukurungudi Government School ,Kalakkadu ,Tamil Nadu ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Thirukurungudi TVS Government Higher Secondary School ,Thirukurungudi Nagar DMK ,Kalakkadu… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...