×

ஹியரிங் எய்ட் சென்டரில் 15ம் தேதி வரை டிசம்பர் மாத சிறப்பு சலுகை

நெல்லை, டிச.10: காது கேட்கும் திறனைப் பரிசோதனை செய்வதற்காக இந்தியாவில் முதல் தனித்துவமான நிறுவனமாக துவங்கப்பட்ட ஹியரிங் எய்ட் சென்டர், பல்வேறு நகரங்களில் 25 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் 46 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. நிறுவனர் என்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் தொலைநோக்கு பார்வையில், நிர்வாக இயக்குநர் கணேஷ், சேல்ஸ் மார்க்கெட்டிங் இயக்குநர் முரளிதரன் மற்றும் பைனான்ஸ் ஆடியாலஜி இயக்குநர் தரணி முரளிதரன் ஆகியோரின் அனுபவ பரிந்துரைகளால், காதுகேளாமைக்கு ஒவ்வொருவருக்கும் தனித்துவமான தீர்வுகளை வழங்குவதில் சிறந்த நிறுவனமாகத் திகழ்கிறது.

ஹியரிங் எய்ட் சென்டர் தென் மாவட்டங்களான திருநெல்வேலி வண்ணார்பேட்டை மற்றும் தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு ஆகிய இரண்டு மையங்களில் செயல்பட்டு வருகிறது. அனைத்து கிளைகளிலும், இந்திய மறு வாழ்வு கவுன்சில் பதிவுபெற்ற செவித்திறன் நிபுணர்கள் உள்ளனர். காதுக்குள் அணியும் மிகச்சிறிய காது கருவி முதல் முன்னணி நிறுவனங்களின் அனைத்து வகை காது கருவிகளும் கிடைக்கிறது. ஹியரிங் எய்ட் சென்டரில் இப்போது டிசம்பர் மாத சிறப்பு சலுகையாக 6 மாத பேட்டரிகள் இலவசம், ரீச்சார்ஜபிள் ஆப்ஷன், வாட்டர் புரூப், ப்ளூடூத் இணைப்பு ஹியரிங் எய்ட்கள், சுலப தவணையில் கிடைக்கின்றன மற்றும் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை டிசம்பர் 15 வரை செய்து கொள்ளலாம் எனவும், மேலும் தகவல் மற்றும் விவரங்களுக்கு 96006-47791 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : Hearing Aid Center ,Nella ,India ,Hearing Aid Centre ,N. S. ,Krishnamurthi ,
× RELATED ரேஷன் அட்டைகள் சிறப்பு குறைதீர் முகாம்