சென்னை: நீதித்துறையை சேர்ந்தவர்கள் தங்களுடைய சொந்த கருத்துகளை தெரிவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு தங்களுடைய சொந்த கருத்துக்களை தெரிவிக்கின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட பிரச்சனை முழுக்க முழுக்க இந்துத்துவா அமைப்பினரால் ஏற்படுத்தப்பட்டது. திருப்பரங்குன்றம் பிரச்சனையில் எந்தவித கலவரத்துக்கும் மக்கள் இடம் கொடுக்கவில்லை என கூறினார்.
