சென்னை: இந்திய விடுதலைக்காக முதல் முதலில் குரல் கொடுத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பூலித்தேவன் என நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா பேசிவருகிறார். ராணி லட்சுமிபாயை பற்றி பேசுகிறார்கள், அனால் ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கை வெடிவைத்து தகர்த்த குயிலியை தெரியாது. தமிழ்நாட்டில் நேதாஜி சாலை, திலகர் சாலை, கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை உள்ளது. வட மாநிலங்களில் எங்காவது வ.உ.சிதம்பரனார் பெயர் எதற்காவது சுட்டப்பட்டுள்ளதா? என கேள்வியெழுப்பினார்.
